உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாண்லே ஊழியரை தாக்கியவருக்கு வலை

பாண்லே ஊழியரை தாக்கியவருக்கு வலை

புதுச்சேரி: பால் பாக்கெட் கொடுக்க தாமத்தித்த பாண்லே ஊழியரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். முத்தியால்பேட்டை, விஸ்வநாதன் நகர், சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார், 49; கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் உள்ள பாண்லே பூத் ஊழியர். கடந்த 17ம் தேதி வைத்திக்குப்பம் ராஜா என்பவர் பால் பாக்கெட் கேட்டார். தனது ஷிப்ட் முடிந்து விட்டதால் அடுத்து வரும் நபர் தருவார் காத்திருங்கள் என கூறியுள்ளார். அன்று அங்கிருந்து ராஜா புறப்பட்டு சென்று விட்டார்.கடந்த 23ம் தேதி முத்தியால்பேட்டை மணிகூண்டு பூத்தில் பால் பாக்கெட் எடுக்க சென்ற அய்யனாரை வழிமறித்த ராஜா, என்னை பால் பாக்கெட் வாங்க காத்திருக்க வைத்தது நீ தானே என கூறி சராமாரியாக தாக்கினார். காயமடைந்த அய்யனார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ