மேலும் செய்திகள்
கவர்னரால் ஜனநாயக படுகொலை: பிரியங்க் கார்கே
19-Aug-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் தலைமை செயலகத்துடன் கூடிய, புதிய சட்டசபை கட்ட கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:புதிய சட்டசபை வளாகம், தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், 15 ஏக்கர் பரப்பளவில், 576 கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த கோப்பு மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்.நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இந்த கோப்புக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த காலங்களில், கவர்னர், தலைமைச் செயலர், முதல்வர் என்ற மூன்று அதிகார மையங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது, அனைத்து நிர்வாக மையங்களும் ஒன்றிணைந்து, ஒரே அரசாக செயல்படுகிறது. புதிய கவர்னர் இணக்கமாக இருப்பதால், நல்ல நிர்வாகம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
19-Aug-2024