உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஐ.டி., மாணவர்கள் ஒரு நாள் கள பயணம்

என்.ஐ.டி., மாணவர்கள் ஒரு நாள் கள பயணம்

அரியாங்குப்பம்: காரைக்கால் என்.ஐ.டி., மாணவர்கள், ஒரு நாள் கள பயணமாக, புதுச்சேரி பாரதியார் பல்கலை கூடத்தை பார்வையிட்டனர்.அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலை கூடம் இயங்கி வருகிறது. இங்கு, இசை, நடனம், நுண்கலை துறைகளில் மாணவ, மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். கல்லுாரியில், பயிற்சி பட்டறை, கலை துறை தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.காரைக்கால், என்.ஐ.டி., மாணவ, மாணவிகள், ஒரு நாள் கள பயணமாக நேற்று, பாரதியார் பல்கலை கூடத்திற்கு வந்திருந்தனர். கல்லுாரியில், மாணவர்கள் வரைந்த ஓவியங்கள், சிற்பங்களை பார்வையிட்டனர். மேலும், நடனத்துறையில் கற்றுத்தரும் பல்வேறு நடனங்கள் மற்றும் இசை துறையில் கற்று தரும் வாசிப்புகள் குறித்தும், பேராசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.கள பயணமாக வந்த என்.ஐ.டி. மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் அன்னபூரணா மற்றும் பேராசிரியர்கள் உதவிபுரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை