உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை மேலாண்மை வரைபடத்தில் எதிர்கால திட்டம் இல்லை; : காங்., தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

கடற்கரை மேலாண்மை வரைபடத்தில் எதிர்கால திட்டம் இல்லை; : காங்., தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மீனவர் காங்கிரஸ் பிரிவு ஆலோசனை மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் மீனவர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பேசியதாவது:மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதற்கு அவர்களின் போராடும் குணம் விலகிப்போனதுதான் காரணம்.மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெண்களை பஞ்சாயத்து தலைவராக போட்டு, போராட்டத்தை வலுப்படுத்துங்கள். அப்போதுதான் மீனவர்கள் பிரச்னை வெளியே தெரிந்து, தீர்வு காணப்படும். மத்திய அமைச்சர் தேங்காய்த்திட்டிற்கு வந்தார். அதற்குப்பின்னர் எதுவும் செய்யவில்லை.கடற்கரை மேலாண்மை திட்டம் கொண்டுவந்தால் படகுகள் ஓட்டுவதற்கு உரிமம் வேண்டும். மீனவர்கள் பேசும் தமிழ் தெரியாத கடலோர காவல்படையினர்தான் விசாரணை நடத்துவர். அப்போது பாதிக்கப்படுவது மீனவர்கள்தான். எனவே இச்சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்பு மீனவர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வைத்திலிங்கம் கிண்டல்

காங்., தலைவர் வைத்திலிங்கம் பேசும்போது, வீராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுக விரிவாக்க திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். என்ன வசதி கிடைக்கும் என்று கேட்டால், உங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கும் என்கிறார். அங்கு என்னென்ன வசதிகள் ஏற்படுத்தபட உள்ளது என்று கூட கூறவில்லை. மக்களுக்கு அரிசி கிடைக்குமா என்று கேட்டால் ஓடுகின்றார் எனப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ