மேலும் செய்திகள்
ஆச்சார்யா கல்லுாரி ஆண்டு விழா
18-Apr-2026
புதுச்சேரி: கோரிமேட்டில் உள்ள அன்னை தெரேசா சுகாதார அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. கருத்தரங்கு கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் நந்தினி வரவேற்றார். பேராசிரியர்கள் மரியா தெரேசா, பெலிசியா சித்ரா, அய்யப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற பேராசிரியர் மல்லிகா பங்கேற்று பேசினார். கல்லுாரியில் சிறப்பாக பணியாற்றிய மூத்த செவிலிய அதிகாரிகளை கவுரவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றிப்பெற்ற செவிலிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இணை பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார்.
18-Apr-2026