மேலும் செய்திகள்
கடலில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது
09-Feb-2025
கோட்டக்குப்பம்: தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர்பின்னமானேனி, 44; திருமணமாகவில்லை. ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஓராண்டாக வேலையில்லாமல் இருந்து வந்தார்.தனது நண்பர்களான அஷ்வின், பிரசாத் ஆகியோருடன், நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பத்தில் அறை எடுத்து தங்கினார். நேற்று மாலை 5:30 மணிக்கு, 3 பேரும் அப்பகுதி கடலில் குளித்தனர்.அப்போது எழுந்த ராட்சத அலையில், சந்திப்ராவ் பின்னமானேனி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Feb-2025