உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

புதுச்சேரி: பொய்யாக்குளத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பொய்யாக்குளம், பாக்கமுடையான்பட்டு மெயின்ரோட்டில் வசித்தவர் ராமன்,54; பெயிண்டர். கடந்த 30ம் தேதி தனது வீட்டின் பாத்ரூம் கதவின் பழுதை நீக்க மின்சார டிரில்லர் மூலம் சுவற்றில் துளையிட்டுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.  அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் மகன் ஸ்ரீகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை