மேலும் செய்திகள்
நெல்லையில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
21-Feb-2025
புதுச்சேரி: பானிபூரி வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ. 5 ஆயிரம் பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி காமராஜர் நகர், தமிழ்ச்செல்வி வீதியை சேர்ந்தவர் ஹரி ஓம் சர்மா,48. இவர் காந்தி வீதி- அரவிந்தர் வீதி சந்திப்பில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இரவு 10:00 மணி அளவில் பானிபூரி கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், சர்மாவிடம் ரூ. 2 ஆயிரம் மாமூல் கேட்டனர். அதற்கு, சர்மா மறுத்ததால், அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டினர். மேலும், ஹரி ஓம் சர்மா பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து, பைக்கில் தப்பி சென்றனர்.ஹரி ஓம் சர்மா புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
21-Feb-2025