மேலும் செய்திகள்
மருத்துவப்படி நிறுத்தம்: ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
07-Oct-2026
புதுச்சேரி: அனைத்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு புதுச்சேரி மாவட்டம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி, பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்வினர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி தலைவர் சண்முகசுந்தரம், சங்க நிர்வாகி கெளஞ்சியப்பன், காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மெடிக்கல் அலவன்ஸ் ரூ.1000, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நிறுத்தப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொருளாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
07-Oct-2026