உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

பண்ருட்டி,: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தமிழ் வருட பிறப்பு முன்னிட்டு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தமிழ் வருட பிறப்பையொட்டி, காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை