இன்ஜினியரிங் கவுன்சில் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை மனு
புதுச்சேரி : சிவில் இன்ஜினியரிங் கவுன்சில் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் புதுச்சேரி சென்டர் சேர்மன் முருகன் கடந்த ஆண்டு நவ. 16ம் தேதி புதுச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் கவுன்சில் ஸ்டேரிங் கன்சார்டியம் உருவாக்கினார்.இதில் புதுச்சேரியின் அனைத்து சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் மற்றும் காரைக்கால், மாகே, ஏனாம் மாவட்ட இன்ஜினியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.கான்சார்டியத்தின் தலைவராக விஜயநேரு, செயலாளராக சடாட்சரமூர்த்தி, இணை செயலாளராக தனலட்சுமி, ராஜேஸ்வர ராவ் (ஏனாம்), பிரேம்குமார் (காரைக்கால்), ஜெரால்ட் சாலமன் பீட்டர் (மாகி) மற்றும் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், சுந்தரராமன், தேவதாசு, அறிவழகன், நாராயணபிள்ளை, ஆகியோர் உறுப்பினர்களாகவும், தாயுமானவன், எழில், நாக கார்த்திகேயன், கார்த்திகேயன், சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் உள்ளனர்.இந்நிலையில், அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் புதுச்சேரி சென்டர் மற்றும் புதுச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் கவுன்சில் ஸ்டேரிங் கன்சார்டியம் நிர்வாகிகள், புதுச்சேரியில், சிவில் இன்ஜினியர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், அங்கீகரிக்கவும், மாநிலத்தில் சிவில் இன்ஜினியர்களுக்கான கவுன்சில் அமைக்க கோரி முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.