உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளாஸ்டிக் இல்லா கடற்கரை விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் இல்லா கடற்கரை விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி, : புதுச்சேரி சிறகுகள் நல அறக்கட்டளை 7ம் ஆண்டு விழாவையொட்டி, பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.புதுச்சேரி கடற்கரையில் நடந்த நிகழ்விற்கு அறக்கட்டளை நிறுவனர் பாபு தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிர்வாக தலைவர் சாமியப்பன், பொருளாளர் சுந்தர மகாலிங்கம், செயலாளர் முகமது பர்கான், ஆலோசகர் சுதர்சன்துரை, ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள், சிறகுகள் நல அறக்கட்டளை டிரஸ்டிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ