உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளஸ் 1 மாணவர் தற்கொலை

பிளஸ் 1 மாணவர் தற்கொலை

புதுச்சேரி, :பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் பிளஸ் 1 மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தியால்பேட்டை, சோலை நகர் தென்றல் வீதியைச் சேர்ந்தவர் அஞ்சலை, 65. இவரது பராமரிப்பில் மகள் சுந்தரவல்லி, பேரன் அஜய், 16; பேத்தி புஷ்பா ஆகியோர் இருந்து வந்தனர்.அஜய், அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த சில தினங்களாக அஜய் பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை எனக் கூறி வீட்டில் இருந்து வந்தார். இதையடுத்து, அஞ்சலை நேற்று முன்தினம் (9ம் தேதி) அவரை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பினார்.நேற்று மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அதை அஞ்சலை கண்டித்தார். மனமுடைந்த அஜய் வீட்டின் அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ