உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாய் அடித்து கொலை போலீசார் விசாரணை

நாய் அடித்து கொலை போலீசார் விசாரணை

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் நாய் அடித்து கொள்ளப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் தங்கமணி, 40. இவர் மணக்குள விநாயகர் கோவில் அருகில் பாசி மணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7.30; மணியளவில், வீட்டில் இருந்த போது, வெளியே நாய் அலறும் சத்தம் கேட்டுள்ளது. உடனே வெளியே வந்து பார்த்த போது,  தங்கமணி வளர்த்த நாயை அவரது வீட்டின் அருகே வசிக்கும், பிரகாஷ் அடித்துக் கொன்று விட்டு, தப்பியோடிவிட்டார். இது குறித்து தங்கமணி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை