உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

புதுச்சேரி: கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாணரப்பேட்டை, அலென் வீதியை சேர்ந்தவர் முருகேசன்,50; ஆட்டோ டிரைவர். இவரது இளைய மகள் பூஜா,18; கதிர்காமம் அரசு கல்லுாரியில் பயோ டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். பூஜா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரி விடுமுறை என்பதால் அவர் வீட்டில் இருந்தார். அவரது மூத்த சகோதரி ஹரிணி, மாலை கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு மூடியிருந்தது. நீண்ட நேரம் தட்டியும், கதவு திறக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பூஜா துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து, பூஜா இறந்ததை உறுதி செய்தார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி