மேலும் செய்திகள்
பைக் திருட்டு
09-Aug-2024
புதுச்சேரி: தெப்பகுளம் அருகில் நிறுத்திய ஸ்கூட்டியை காணவில்லை என பூக்கடை தொழிலாளி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.வில்லியனுார் எஸ்.எம்.வி., புரத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்,43; பூக்கடை வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் உள்ள தெப்பகுளம் எதிரில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தழை பறிக்கச் சென்றார். திரும்பி வந்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.
09-Aug-2024