உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

 : புதுச்சேரி: மருத்துவமனையில் அடையாளம் தெரியாத இறந்த நபரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி கண் டாக்டர் தோட்டம் சாலையில் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் கடந்த 16ம் தேதி சுயநினைவின்றி  மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், 17ம் தேதி இறந்தார்.  இறந்தவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என  எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !