உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்திற்கு இடையூராக பேனர்: போலீசார் வழக்கு பதிவு

போக்குவரத்திற்கு இடையூராக பேனர்: போலீசார் வழக்கு பதிவு

பாகூர்: நோணாங்குப்பத்தில் பள்ளி அருகே போக்குவரத்து இடையூராக பேனர் வைத்தவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். புதுச்சேரி – கடலுார் சாலை, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரமாக போக்குவரத்து இடையூராக பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, காவலர் விக்ரம் தர்மா அளித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை சவுரி, நோணாங்குப்பத்தை சேர்ந்த கவுதம் என்பவர் மீது,  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !