போலீஸ் ஸ்டேஷன் டெலிபோன் பி.எஸ்.என்.எல்., விளக்கம்
புதுச்சேரி: திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு குறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் தொலைபேசி துண்டித்தல் மற்றும் மறு இணைப்பிற்கான செயல்முறைகள் முழுவதுமாக கணினிமயமாக மாற்றப்பட்டுள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர், தங்கள் பில் தொகையை செலுத்தும் போது, அவர்களின் சேவை தானாகவே மீண்டும் செயல்படும். இந்நிலையில், திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி எண் 0413- 2688435, பணம் செலுத்தாத நிலையிலும், பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க , மறு இணைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.