உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எடுபிடி வேலை கொடுத்து டார்ச்சர் புலம்பும் போலீசார்

எடுபிடி வேலை கொடுத்து டார்ச்சர் புலம்பும் போலீசார்

புதுச்சேரி போலீஸ் துறையில் மக்களின் குறைகளை பரிவுடன் கேட்டு தீர்த்து வைப்பது, குற்றம் நிகழ்ந்தால் பாரபட்சம் இன்றி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதும், தனக்கு கீழ் வேலை செய்யும் கான்ஸ்டபிள் உள்ளிட்டோரை கண்ணியமாக நடத்தும் அதிகாரிகள் உள்ளனர்.ஆனால் உளவுத்துறையில் பணியாற்றும் இன்ஸ்., ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றும் வயது மூத்து காவலர்களை கீழ்த்தரமாக கண்டிப்பதும், பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.குண்டர்களை போல காலர் பட்டனை திறந்து விட்டுக் கொண்டு சட்டசபை, போலீஸ் தலைமையகம் எதிரில் உலா வரும் இன்ஸ்., தனக்கு கீழ் படியாத காவலர்களை உளவு பணிக்கு அனுப்பாமல், எடுபிடி வேலைகள் கொடுத்து டார்ச்சர் செய்வதாக போலீசார் புலம்புகின்றனர்.தவளக்குப்பம் சிறுமி பாலியல் வழக்கில் கிராம மக்கள் கூடி பள்ளியை சூறையாட திட்டமிட்ட தகவல் முன்கூட்டியே அறிந்து போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் கோட்டை விட்டதால், பள்ளி சூறையாடப்பட்டதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு 6 மணி நேரம் சாலை மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுபோன்ற பதற்றமான செயல் நடக்கவுள்ள தகவல்களை சேகரிக்க தவறியவர்கள் மீது போலீஸ் தலைமையகம் எந்தவத நடவடிக்கையும் எடுக்காது என்ற தைரியத்தில் உளவு துறை குறட்டை விட்டு துாங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !