போலியோ சொட்டு முகாம்
அரியாங்குப்பம்: போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ., ராமு சொட்டு மருந்து செலுத்தினார். மணவெளி தொகுதி தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு செலுத்தி விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில், ராமு எம்.எல்.ஏ., 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தினார். முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதே போன்று, அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது.