| ADDED : செப் 27, 2026 05:51 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் தாகூர் நகர் பகுதியில் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிடும் அசோக்ஆனந்த், தாகூர் நகர் பகுதியில் வீடுவீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தில்போது, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், தொகுதி வளர்ச்சி, மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியளித்தார். அப்போது அவரை வரவேற்ற பொதுமக்கள், ‘கவலைபடாதீங்க தம்பி.. நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள், எங்கள் ஓட்டு உங்களுக்குதான்’ என உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த அசோக் ஆனந்த், தன்னை வெற்றி பெற செய்தால், தொகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாக பாடுபடுவேன் என்றும் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்தார். பிரசாரத்தில், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அசோக் ஆனந்திற்கு ஆதரவாக ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.