உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பருவ மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர்  ஆலோசனை

பருவ மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர்  ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சுதாகர்,  போலீஸ், நகராட்சி,  மின்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வேளாண்துறை. கல்வித்துறை, மீன் வளத்துறை. கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பங்கேற்றனர். கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், ‘வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் துார் வார வேண்டும். நகர்ப்புறங்களில் கடந்த பருவ மழையின் போது மழை நீர் தேங்கிய இந்திரா காந்தி சதுக்கம், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கடா நகர் மற்றும் பூமியான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களை துார் வாரவேண்டும். கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களையும் விரைவில் துார் வாரவேண்டும். செப்டம்பர் முதல் வாரத்திற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும். மழைக் காலங்களில் கூடுதல் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஏரிகளின் கரையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஆரம்ப  சுகாதார நிலையங்களிலும், போதுமான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த துறைகளும் கட்டுப்பாட்டு அறைகள் முறையாக இயங்குவதை உறுதிசெய்யவேண்டும். அதிகாரிகள் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை