உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லுார் ஏரியில் விரயமான நீர் தடுப்பு

நல்லுார் ஏரியில் விரயமான நீர் தடுப்பு

திருபுவனை: தினமலர் செய்தி எதிரொலியால் நல்லுார் ஏரியில் மதகை அடைத்து தண்ணீர் வீணாக வெளியேறியதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.புதுச்சேரியில பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையால் திருபுவனை அடுத்த நல்லுார் ஏரி நிரம்பியது. ஏரயில் இருந்து தண்ணீர் வெளியேறும் மதகு அடைக்கப்படாததால், கடந்த 3ம் தேதி முதல் நேற்று முன்தினம் 7ம் தேதி வரை 5 நாட்களாக தண்ணீர் வெளியேறி விரயமானது.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையால், ஏரி மதகு அடைக்கப்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறியது தடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ