கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்
புதுச்சேரி: இந்திய இளையோர் விடுதிகள் சங்கம், காலாப்பட்டு கிளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்திய இளையோர் விடுதிகள் சங்கத்தின், காலாப்பட்டு கிளை சார்பில், நாளைய மாணவர்களை உருவாக்குவோம் என்ற தலைப்பில், கல்வி உபகரஙணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஆண்டியார்பளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சரவணன், கிளை சேர்மன் செந்தில்குமார், கிளை செயலாளர் அருண்நாகலிங்கம் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், இளையோர் விடுதி கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.