உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

அரியாங்குப்பம்: அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட்டை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அபிேஷகப்பாக்கம் சேத்திலால், அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் ரெயின் கோட்டை சபாநாயகர் செல்வம் வழங்கினார். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றால் தலா ரூ. 10 ஆயிரம் தனது சொந்த நிதியை ஊக்கத்தொகையாக வழங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை