உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்கம்,  பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பி.ஆர்.டி.., தலைமை அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஞானவேல் தலைமை தாங்கினார். தேவநாதன், வடிவேல், தமிழ்செல்வன், கலைவாணன், விஜயராகவன் முன்னிலை வகித்தனர்.  பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், முனுசாமி, அருணகிரி, பத்மநாபன், கலியபெருமாள், வேலையன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். ஊழியர்களுக்கு அனைத்து நாட்களும் பணி வழங்க வேண்டும். இ–பஸ்களை பி.ஆர்.டி.சி., ஊழியர்களை கொண்டு இயக்க வேண்டும். 7 வது ஊதியக் குழு பரித்துரைகளை அமல் படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரத்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !