மேலும் செய்திகள்
6 காமராஜ் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
31 minutes ago
மதுபான லாரிகளில் தாசில்தார் சோதனை
34 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை துவங்குகிறது. பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை துவங்கி, வரும், 11ம் தேதி வரை நடக்கிறது.முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் அலுவலகம் அருகில், மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி அருகில், கரியமாணிக்கம், தவளக்குப்பம் ஜங்ஷன், திருக்கனுார், மதகடிப்பட்டு, பாகூர், வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாமில், புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு மற்றும் பிற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல் வருபவர்களுக்கு சிம் இலவசமாக தரப்படும்.தற்போதுள்ள, 2ஜி, 3ஜி, சிம் வைத்திருப்பவர்கள், 4 ஜி சிம்மாக இலவசமாக மேம்படுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச்., தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம். புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, ரூ.329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு ரூ.999,க்கு கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
31 minutes ago
34 minutes ago