மக்கள் குறை தீர்வு கூட்டம்
புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 45க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகார்களை தெரிவித்தனர்.இதற்கிடையே, லாஸ்பேட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 95 லட்சம் முதலீடு செய்து, இழந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை மீட்டு கொடுத்ததற்காக, வெங்கடேசன் சைபர் கிரைம் போலீசாருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.மேலும், பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 26 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.