உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ.200 கோடி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 3,400 பேரிடம் ரூ.200 கோடி மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். ஷார்ப்ஜாப்ஸ் (Sharpjobz) என்ற பேஸ்புக் பக்கத்தில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, தனியார் ஏஜென்சி அதிகாரி என, தன்னை அறிமுகப்படுத்தி பேசிய நபர், கனடாவில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

பெங்களூரில் பதுங்கல்

விசா, மருத்துவப் பரிசோதனை, இன்சூரன்ஸ் எடுப்பதற்கு பணம் டிபாசிட் செய்ய கூறியுள்ளார். நம்பிய சுரேஷ்குமார், அந்நபர் கூறிய வங்கி கணக்கில், 17.71 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தார். வேலை வாங்கி தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்குமார், மார்ச் 22ல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்தனர்.இரு மாதங்களாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ்குமாரை ஏமாற்றியது உத்தரபிரதேசத்தை சேர்ந்த கும்பல் என்பதும், பெங்களூருவில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் பெங்களூருவில் மோசடி கும்பல் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அவர்கள், மத்திய பிரதேச மாநிலம், கோபால் புராவை சேர்ந்த சுபம் ஷர்மா, 29, பீஹார், நவாடா தீபக்குமார், 28, உத்தரபிரதேசம் பஸ்டி பகுதி ராஜ்கவுண்ட், 23, மத்திய பிரதேசம் கணேஷ்பூரா நீரஜ்குர்ஜார், 28, என, தெரியவந்தது.விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, நாடு முழுதும், 3,400 பேரிடம் ஏமாற்றி, 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.

9 மாநில போலீசார்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசம்கான் தலைமையில் நால்வரும் தனிக்குழுக்களாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து, 21 மொபைல் போன்கள், இரு பாஸ்போர்ட், 42 சிம்கார்டு, 1 லேப்டாப், 64 ஏ.டி.எம்., கார்டுகள், 41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நால்வரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கர்நாடகா, தமிழகம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டில்லி, அசாம் உள்ளிட்ட 9 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மோசடி கும்பலை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.

ரூ.1 கோடியில் அடுக்குமாடி வீடு

கைதாகியுள்ள நால்வரும், யாரை ஏமாற்ற வேண்டும்; எவ்வளவு பணம் ஏமாற்ற வேண்டும்; எந்த வங்கி கணக்கிற்கு பணம் பெற வேண்டும் என திட்டமிட்டு, அட்டவணை தயார் செய்து பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறு மோசடி செய்து அசாம்கானிடம் அளிக்கும் பணத்தில், 50 சதவீதம் கமிஷன் பணம் மட்டும் நால்வரும் பெற்று வந்துள்ளனர். இந்த பணத்தின் வாயிலாக 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்து முன்பணமாக, 12 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

nagendhiran
ஆக 04, 2024 17:48

லஞ்சம், திருட்டு, மாமுல், ஊழல், ஏமாற்றுதல் செய்யும்"நபர்களின் சொத்துக்களை பரிமுதல்"செய்தால்தான் தவறுகள்"குறைய வாய்ப்புண்டு? சும்மா தண்டனை மற்றும்"போதாது?


D.Ambujavalli
ஆக 04, 2024 16:57

இவ்வளவு 'சமர்த்தாக ' வேலை வாய்ப்பு exchange நடத்தியவர்கள், நம் ஊர் திமுகவில் சேர்ந்திருந்தால் நல்ல 'பிரகாசமான' துறை அமைச்சராகி இருக்கலாமே Freelance ஆக தொழில் செய்ததை போல பலமடங்கு, 300 , 400 கோடிகளில் பங்களா, பண்ணைகள் என்று கொழிக்கலாமே


Kasimani Baskaran
ஆக 04, 2024 15:02

நேர்மையாக வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தியிருந்தால் இதை விட பல மடங்கு சம்பாதித்து இருக்க முடியும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 13:24

முகநூலில் பார்த்து நிறுவனத்தின் மீது திருப்தியாகி வேலைக்கு அப்ளை பண்ணுறவங்க தமிழர்களாகத்தான் இருப்பார்கள் .....


Nandakumar Naidu.
ஆக 04, 2024 12:59

இவர்களை வெளியே விடக்கூடாது, உடனடியாக இவர்களை தலைவன் உட்பட தூக்கில் போட வேண்டும்.


அலெக்ஸ்
ஆக 04, 2024 12:41

உ.பி காரங்க மெத்தப் படிச்சவங்க. இதுமாதிரி டகால்டி வேலையெல்லாம் படிச்சவந்தான் செய்யமுடியும். தெற்கே எல்லோரும்.பரம தத்திகள். ஃபாரின்ல தான் வேலை பாப்பாங்கோ.


duruvasar
ஆக 04, 2024 12:30

தென்கிழக்காசிய ஸ்காட்லாந்து யார்டை விட சிறப்பாக செயல்பட்டிருக்கின்றார்கள் இந்த சிவப்பு தொப்பி ஊர்க்காவல் படையினர். வாழ்த்துக்கள்.


R S BALA
ஆக 04, 2024 11:49

ஏன் 17 லச்சம் இருந்தா அத வைத்து இங்கயே தொழில் தொடங்கலாமே அத விட்டுப்போட்டு வெளிநாடு போய் சம்பாதிக்க நெனச்சா இப்படித்தான் பானிபூரி வச்சிசெய்வான்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ