மகளிர் ஒருநாள் கிரிக்கெட் புதுச்சேரி அணி வெற்றி
புதுச்சேரி: மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் சார்பில், 23 வயதிற்குட்பட்ட மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, சண்டிகர் நகரில் நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி அணியும், நாகலாந்து அணியும் மோதின.முதலில் விளையாடிய நாகலாந்து அணி 48.2 ஓவர்களில் 131 ரன்களுக்குஆட்டம் இழந்தது. தொடர்ந்து விளையாடிய புதுச்சேரி அணி 33 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 134 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புதுச்சேரி அணியில் 3 விக்கெட் எடுத்த அபிராமி 23 ரன்களும், பேட்டிங்கில் எடுத்து ஆட்ட நாயகிவிருது வென்றார்.