மேலும் செய்திகள்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு
13-Mar-2025
புதுச்சேரி: உலக துாக்க தினத்தையொட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில், நுரையீரல் நோய்கள் தொடர்பான மருத்துவ கருத்தரங்கு நடந்தது.மருத்துவக் கல்லுாரி நுரையீரல் நோய்கள் சிறப்பு மருத்துவ பிரிவு சார்பில், நடந்த கருத்தரங்கில், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் தலைமை தாங்கினார். ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் சிறப்புரையாற்றினார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் செந்தில்வேலு, உறக்க பிரச்னையை எவ்வாறு ஆய்வு செய்யலாம் என, விளக்கினார்.நுரையீரல் நோய்களின் பிரிவு தலைவர் வெங்கடேஸ்வர பிரபு, மருத்துவர்கள் ஹரிஷ், ஹரிகரன் உள்ளிட்ட மருத்துவர்கள், துாக்கத்தின் அவசியம், துாக்கம் இல்லாமல் இருப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள், துாக்கத்தில், ஏற்படும் மூச்சு திணறல்கள் அதனை குறைப்பதற்கான மருத்துவ முறைகள் பற்றி விளக்கமாக பேசினர்.நிகழ்ச்சியில், பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
13-Mar-2025