உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் ரமேஷ் எம்.எல்.ஏ., அறிவிப்பு

இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் ரமேஷ் எம்.எல்.ஏ., அறிவிப்பு

புதுச்சேரி : என்.ஆர்., காங்., கட்சியின் இளைஞர் அணிக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, என்.ஆர்., காங்., கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:அகில இந்திய என்.ஆர்., காங்., கட்சியின் தலைவர் ரங்கசாமியின் ஒப்புதல்படி, மாநில என்.ஆர்., காங்., இளைஞர் அணிக்கு மாநிலம், மாவட்டம், தொகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி, மாநில இளைஞரணி துணைத் தலைவர்களாக பிரபாகரன் என்கிற முரளி, ரத்தினவேலு, திருமுருகன், மாநில பொதுச் செயலாளர்களாக மணிமாறன், வீரப்பன், பூவரசன், மாநில செயலாளர்களாக மோகன்தாஸ், குபேந்திரன் குணபாலன், ராம்குமார், மத்திய மாவட்ட தலைவராக பார்த்தசாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, ரமேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை