கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ரவிக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை
வில்லியனுார்: ஒதியம்பட்டு மெயின்ரோட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் சார்பில், வில்லியனுார் தொகுதி ஒதியம்பட்டு அம்மன்குளம் தெரு முதல் அப்துல் காதர் தெரு மதகு பகுதி வரையில் ரூ.35.70 லட்சம் திட்ட மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. விழாவில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். நிழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலைக் கோட்ட செயற்பொறியாளர் சீனுவாசராம், உதவி பொறியாளர் சிவப்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.