உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரவுடி ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை

ரவுடி ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை பகுதியில் ரவுடி ஊருக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். முத்தியால்பேட்டை, குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 26. ரவுடியான இவர் மீது 2 கொலை, 3 அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஜனவரியில் சின்ன கோட்டக்குப்பத்தை சேர்ந்த ரவுடியான அப்பு என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைகக்கப்பட்ட புஷ்பராஜ், தற்போது ஜாமினில் வந்துள்ளார்.  ஊருக்கு வந்துள்ள ரவுடி புஷ்பராஜ் மூலம் முத்தியால்பேட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆகையால், அவரை ஊருக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் நந்தாகுமார் மற்றும் போலீசார், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !