உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செல்லான் நாயகருக்கு தபால் தலை வௌியிட கோரிக்கை

செல்லான் நாயகருக்கு தபால் தலை வௌியிட கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் அறிக்கை: புதுச்சேரி அரசு செவாலியே செல்லான் நாயகர் பிறந்த நாளைக் கொண்டாடி அவருக்கு கவுரவம் செய்துள்ளது. புதுச்சேரி இந்தியாவோடு இணைய உழைத்த தலைவர்களில் முன்னணியில் இருந்தவர் செல்லான் நாயகர். அவர் புதுச்சேரியை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்காமல் இருந்திருந்தால், புதுச்சேரி இன்று பிரான்ஸ் அரசின் ஒரு மாநிலமாக இருந்திருக்கும். எனவே, செல்லான் நாயகருக்கு நினைவுத் தபால் வெளியிட வேண்டும். அவர் மேயராக பணியாற்றிய உழவர்கரை நகராட்சி வளாகத்தில் அவரது சிலை நிறுவ வேண்டும். அவரது சொந்த ஊரான காலாப்பட்டில் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செல்லான் நாயகரின் ஆராய்ச்சி இருக்கை நிறுவ அரசு நிதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர், கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை