உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வுபெற்ற செவிலியர் விபத்தில் பலி

ஓய்வுபெற்ற செவிலியர் விபத்தில் பலி

பாகூர் : டேங்கர் லாரி மோதி ஓய்வு பெற்ற செவிலியர் இறந்தார்.கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரணவமூர்த்தி பத்மாவதி, 68; ஓய்வுபெற்ற செவிலியர். பிள்ளையார்குப்பம் பேப்பர் மில் சாலையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர், நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்று, பேப்பர் மில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, ஓட்டலுக்கு தண்ணீர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. படுகாயமடைந்த பத்மாவதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவர் கடலுார் கங்கணாங்குப்பத்தை சேர்ந்த துரைராகவன், 58; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !