உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் உதவிப்பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிந்திரராஜிக்கு பாராட்டு  விழா நடத்தப்பட்டது. புதுச்சேரியில் நடந்த விழாவில், கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வரலட்சுமி தலைமை தாங்கினார். கடந்த 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிந்திரராஜிக்கு, அபிவிருத்தி அதிகாரி சத்யா, வங்கி மேலாளர் இளங்கோ ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை