உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்களிடம் வீச்சரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கைது 

பொதுமக்களிடம் வீச்சரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கைது 

புதுச்சேரி : திப்புராயபேட்டையில் வீச்சரிவாள் காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, திப்புராயபேட்டையில் பொது மக்களை வாலிபர் ஒருவர் வீச் சரிவாளுடன் மிரட்டி வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், பிரபல ரவுடியான திப்புராயபேட்டை, லாசர் கோவில் வீதியை சேர்ந்த கார்த்தி (எ) கார்த்திகேயன், 28; என்பது தெரியவந்தது.தொடர்ந்து, கார்த்தியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கார்த்தி மீது கொலை, கொலை முயற்சி, அடிக்கடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை