உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறப்பு கூறு நிதிக்கு ரூ.526.82 கோடி ஒதுக்கீடு

 சிறப்பு கூறு நிதிக்கு ரூ.526.82 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்து பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:இந்தாண்டு சிறப்பு கூறு திட்ட நிதியாக ரூ.526.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் திறனை மேற்படுத்த தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கு உதவி தொகையாக மாதம் ரூ.500 மற்றும் கணினி பயிற்சி வகுப்பிற்கு மாதம் ரூ.1000 அவர்களது பயிற்சி காலம் முடியும் வரை அல்லது ஓராண்டு காலம் எது முந்தையதோ அதுவரை வழங்கப்படும்.விடுதியில் தங்கி கல்வி கற்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தங்களது திறன் மேம்பாடு, ஆங்கில மொழி ஆற்றலை வளர்க்க இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ