பட்டானுார் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 குறைப்பு
வானுார் : பட்டானுார் சுங்கச்சாவடி கட்டணத்தில் ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த லோக்சபா தேர்தல் காரணமாக இந்தாண்டு ஏப்ரல் மாதம் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.எஞ்சிய 25 சுங்கச் சாவடிகளுக்கு கடந்த 1ம் தேதி முதல் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில், 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் பட்டானுார் டோல்கேட்டில் கட்டணம் ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. அதில் கார்களுக்கு ரூ.85ல் இருந்து ரூ.80 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.255ல் இருந்து ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.சுங்கச்சாவடிக்கு உள்ள துாரத்தை கணக்கிட்டு கட்டணத்தை குறைத்துள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் கூறினர்.சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு, வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.