உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெற்றோர் இறந்த சோகம் மகன் தற்கொலை

பெற்றோர் இறந்த சோகம் மகன் தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் தாய், தந்தை இறந்த வேதனையில் மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால், பார்வதீஸ் வரர் நகரை சேர்ந்தவர் ரவீந்திரன், 45; கட்டட தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். ரவீந்திரன் மது அருந்துவது வழக்கம். இவரது தாய், தந்தை இறந்ததால் மனவேதனையில் சரியாக வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையானார். நேற்று முன்தினம் ரவீந்திரன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Matt P
செப் 09, 2024 08:29

அப்பா அம்மா வயசஆநால் மறைவது இயற்கை நியதி. இரண்டு பொம்புளை புள்ளைங்களை பெத்துக்கிட்டு பொண்டாடியையம் நினைக்காமல் தூக்கு போட்டுக்கிட்டா வாழ்க்கைக்கு இன்னா தான் அர்த்தம். தன்மானம் பொறுப்புணர்வோடு சிந்தித்து வாழலாமே.


சமீபத்திய செய்தி