உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணல் கடத்தல்: 3 ஜே.சி.பி., உட்பட 8 வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்தல்: 3 ஜே.சி.பி., உட்பட 8 வாகனங்கள் பறிமுதல்

காரைக்கால் : காரைக்காலில் சட்ட விரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., உள்ளிட்ட ஐந்து டிராக்டர்களை பறிமுதல் செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரி மதன்குமார் தலைமையில் அதிகாரிகள் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் தாசில்தார் கோகுல் முன்னிலையில் அதிகாரிகள் விழியூர், திருநள்ளார் ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.அப்போது மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 ஜே.சி.பி.,மற்றும் ஐந்து டிராக்டர்களை பறிமுதல் செய்து, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள காமராஜர் திடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ