உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி முதல்வர் அர்ப்பிதா தாஸ் கண்காட்சியைத் திறந்து வைத்து, பார்வையிட்டார். வேதியியல் ஆசிரியர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். விரிவுரையாளர்கள் அருணகிரி, முகமது பாரூக் வாழ்த்தி பேசினர். விரிவுரையாளர் ரகுபதி தொகுத்து வழங்கினார். அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. சிறந்த படைப்புகளை விரிவுரையாளர்கள் குமரவேல், சுபாஷினி மற்றும் தேவி ஆகியோர் தேர்ந்தெடுத்தனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாவாடை சாமி, நித்யா, மணி மேகலை, மேரி ஜோஸ்பின் மற்றும் லட்சுமிதேவி ஆகியோர் செய்திருந்தனர். சிறப்பு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விரிவுரையாளர் ரத்தினவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை