மேலும் செய்திகள்
பைக் திருட்டு
18-Jun-2026
புதுச்சேரி: ஸ்கூட்டர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முத்தியால்பேட்டை, டி.வி. நகரை சேர்ந்தவர் ராயப்பன் மகள் லிதியா. இவர் கடந்த மே மாதம் 25ம் தேதி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு தனது ஸ்கூட்டரில் (பி.ஓய் 01 பி.கியூ.2595) சென்றார். ஸ்கூட்டரை காந்தி வீதி, மீன் மார்க்கெட்டிற்கு எதிரில் நிறுத்தி சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Jun-2026