உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டர் திருட்டு

ஸ்கூட்டர் திருட்டு

​புதுச்சேரி: பான்லே பூத் டெக்னீசியன் ஸ்கூட்டி திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயலு 44,  இவர் புதுச்சேரி பான்லே நிறுவனத்தில் டெக்னீசியனாகப் பணியாற்றி வருகிறார். ​இந்நிலையில், நேற்று மாலை அரும்பார்த்தபுரத்தில் உள்ள பான்லே பூத்தில் சுப்புராயலு எலக்ட்ரிக்கல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது தனது ஸ்கூட்டியை வெளியே நிறுத்தி வைத்திருந்தார். ​நேற்று மாலை இவர் பணி முடித்து வெளியே வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டி காணமால் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில்  ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை