உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேலியமேடு பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி

சேலியமேடு பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில், புதுவை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில், இரண்டு நாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடந்தது.சாரண ஆசிரியர்கள் ஜோதி, முத்து பாபு, ஐயப்பன், லதா, நுண்கலை ஆசிரியர் ரவி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முதல் நாள் முகாமில், சாரண சாரணியர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். இரண்டாம் நாள் பயிற்சியில் சாரணர் சட்டம், ஊதல் சைகைகள், கை சைகைகள், சீருடை அணியும் முறை, விளையாட்டு, கைகுலுக்கும் முறை, அணிமுறை பயிற்சி, முதலுதவி, முடிச்சுகள் கட்டுதல், கைவினை பயிற்சி, உடற்பயிற்சி, பாடல்கள் மற்றும் சர்வ சமய வழிபாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.நிறைவு விழாவில் தலைமை ஆசிரியர் பழனிசாமி, மாநில அமைப்பு ஆணையர் சண்முகம்,மாநில இணைச் செயலாளர் ராமலிங்கம், மாநிலபயிற்சி ஆணையர் தணிகைகுமரன்,சாரணா ஆசிரியர் மதிவாணன், ஆசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி ஆகியோர் சிறந்த சாரண சாரணியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை