மேலும் செய்திகள்
துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை
21-Jun-2026
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு பூங்கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, பகல் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, தீபாரதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் நெட்டப்பாக்கம் மட்டும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெட்டப்பாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
21-Jun-2026