மாநில அளவிலான கைப்பந்து சேலியமேடு அரசு பள்ளி சாதனை
பாகூர்: மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், சேலியமேடு வாணிதாசனார் அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்துள்ளது.திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான, மாநில அளவிலான கைப்பந்து போட்டி, கடந்த வாரம் நடந்தது. இதில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 26 அணிகள் பங்கேற்று விளையாடினர்.இதில், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி, இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும், இப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசினை, வாணிதாசனார் பள்ளி மாணவர் வேணுபிரசாத் பெற்றார். சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி, உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் மற்றும் ஆசிரியர்கள் கிராம மக்கள் பாராட்டினர்.