மேலும் செய்திகள்
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
28-Aug-2024
புதுச்சேரி : கிருஷ்ணா நகர் செல்வகணபதி கோவில் மகா கும்பி ேஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12-வது தெரு மெயின்ரோட்டில் அமைந்துள்ள செல்வகணபதி கோவில் மகா கும்பாபி ேஷக விழா கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி, லட்சுமி நவக்கிரஹ ேஹாமங்கள், கோ-பூஜை நடந்தது. கடந்த 14ம் தேதி 2ம் , மூன்றாம் கால யாக பூஜைகள், விக்ரஹ பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மகா பூர்ணாஹூதி, நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜைகள், நாடி சந்தானம், தத்வார்ச்சனை, யாத்ராதானம் நடந்தது.காலை 11 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது. 11.15 மணிக்கு செல்வகணபதி பரிவார மூர்த்திகளுக்கு, 11.30 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிேஷகம், தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இரவு 6 மணிக்கு மூலவர் சிறப்ப அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவமூர்த்திக்கு ஊஞ்சள் உற்சவம் நடந்தது.
28-Aug-2024